தினமலர்,சுயமாக உழைத்து சம்பாரித்தல் தவறு என்கிறதா அல்லது தமிழர்கள் எல்லாம் அரசியலில் ஈடுபடக்கூடாது என்கிறதா?



தினமலர்- வாரமலரில் தற்போது வந்துள்ள செய்தி.(கருத்து என்றே கூறலாம்). அமெரிக்காவில் தற்போது இருக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை உயர்வதாகவும்(மக்கள் தொகையும் தான்.) அதனால் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்துவருவதாகவும் சொல்லிவிட்டு அதற்காக இந்தியர்கள்  அரசியலில் அங்கீகாரம் கேட்கின்றார்கள் என்று புகார் கூறியுள்ளது. தினமலர் இந்தியர்கள் அங்கு வாழக்கூடாது என்கிறதா? இல்லை அங்கு இருக்கும் ஜனநாயகம் இவர்களுக்கு பிடிக்கவில்லையா? உண்மையான ஜனநாயகம் என்பது எல்லாருக்கும் ஆட்சியில் பங்களிப்பு கொடுப்பது என்பதே. இங்கே இருக்கும் பணநாயகம் போல் அங்கும் இருக்க வேண்டும் என சொல்லவருகிறதா?
அதை விட்டுவிட்டு எங்கே போனாலும் பேசகூடாது என்று சொல்லும் தினமலரை என்னவென்று சொல்லுவது?
சாமியே வரம் தந்தாலும் இவர்கள் தரக்கூடாது என்று சொல்வார்கள் போலிருக்கு. அங்கே குடியுரிமை பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அரசியலில் ஈடுபட முழுஉரிமை இருக்கிறது. இந்தியாவில் தான் அகதிகளை பிச்சைகாரர்களாக நடத்துகிறது. அமெரிக்காவில் அப்படி இல்லை. மற்றவர்களுக்கு வேண்டுமானால் அமெரிக்கா ஒரு மோசமான நாடாக இருக்கலாம். அந்த நாட்டு மக்களை சிறப்பாக நடத்துவது போல் வேறு எங்கும் நடத்துவதில்லை.  
தினமலருக்கு எப்பவும் ஆள்பவர்கள் ஆண்டு கொண்டே இருக்க வேண்டும். இவர்கள் தங்களுக்கு எப்பவும் பல்லக்கு தூக்கிகள் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்களோ

14 Response to "தினமலர்,சுயமாக உழைத்து சம்பாரித்தல் தவறு என்கிறதா அல்லது தமிழர்கள் எல்லாம் அரசியலில் ஈடுபடக்கூடாது என்கிறதா?"

  1. மாசிலா says:

    உள்ளூரில் குண்ட சட்டியில் குதிரை ஓட்டும் இது போன்ற மட கருத்தாளர்களுக்கு அவ்வளவுதான் அறிவு.

    இதே அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் அகதிகளாய் வந்த யூத இனத்தவர் சமுதாயத்தின் அனைத்து முக்கிய துறைகளிலும் புறையோடி முழு நாட்டையும் அல்ல அல்ல முழு உலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்களே! இதை எல்லாம் ஒப்பிட்டு இதேபோல் அமெரிக்க வாழ் இந்தியரும் வளர வேண்டும் என்று அறிவுருத்த போதிய அனுபவம் வேண்டும்.

    ஆக மொத்தம், தினமலர் கருத்தாளரின் அறிவுரைகளானது, தனது அறியாமை மற்றும் அடிமைத்தனத்தையே வெளிப்படுத்துகிறது.

    ஏதோ ஒரு பட்டடைக்கு காவலாய் நிற்கும் மீருகம் பற்றி சொல்வார்களே அது போல் உள்ளது.....

    தனக்குத்தான் எல்லாம் தெரியும், தான் சொல்வதே சரி, தான் எது சொன்னாலும் தலையாட்ட ஒரு கூட்டம் இருக்கிறது என்ற மனப்பான்ன்மை. பாகிஸ்தான் பிரித்த பின்பும் கூட இங்கேயே தங்கி விட்ட இஸ்லாமியர்களுக்கு சம உரிமை கொடுத்து சகோதரத்துவம் காட்டும் மேன்மையான நாடு இந்தியா.
    அப்படியிருக்க நம்மவர்கள் வேறு எங்கேயும் எந்த உரிமையும் கேட்கக் கூடாதென்பது அறிவீனம. ஒருவித அடிமைத்தனம். இதனால்தான் இலங்கையில் நம் இனம் அடியோடு அழிக்கப்பட்டு வருகிறது.

    உலகையே ஆளும்(??) அமெரிக்காவின் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. அவர்கள் ஒடுக்கப்படாமல் இருக்க ஒரு உரிமை அவசியம்.
    இந்தியர்களை வெளியே அனுப்பிவிட்டு அவர்களால் இனி எதுவும் சாதிக்க முடியாது.

    மாசிலா,ம.தி.சுதா,வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) ,பலே பாண்டியா,


    தங்களின் வருகைக்கும் பங்களிப்பிற்கும் நன்றி.

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்...

    Anonymous says:

    Dear Vidya.I am muslim. British Govt. Don’t give the separate place or country for Muslims. But they divided into two part
    Of our country. Most of the Muslims lived & live in that place. Now we are in Tamil Nadu. Our mother tongue is tamil. Our assets are here. My friends are here. What can we do? tell me.

    நாஞ்சில் மனோ,

    தங்களின் வருகைக்கு நன்றி

    //..மற்றவர்களுக்கு வேண்டுமானால் அமெரிக்கா ஒரு மோசமான நாடாக இருக்கலாம். அந்த நாட்டு மக்களை சிறப்பாக நடத்துவது..
    அது என்னவோ உண்மைதான்.

    raja says:

    தினமலரின் நச்சுக்கருத்துக்களுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடக்கவேண்டும் .. அல்லாவிடில் அவர்களது போக்கு தொடர்ந்துகொண்டே இருக்கும்.. பாசிஸத்தின் உச்சம் தினமலர் தான்.

    Unknown says:

    இந்த செய்தி சொல்றது சில நேரங்களில் சரியா வரும்..ஆனா வராது !

    இந்தக் கட்டுரையில் உழைத்து பணம் சம்ப்பதிப்பதை அவர் விமர்சனம் செய்ய வில்லை, அங்கே பொய் எங்களுக்கும் அதிகாரப் பங்கீடு வேண்டும் என்று கேட்பதை தவறு என்பது போல எழுதியிருக்கிறார். விட்டுத் தள்ளுங்கள். உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் கூற விரும்புகிறேன். இந்த அந்துமணி அவ்வப்போது பல வருடங்களுக்கு முன்னதாக வந்த கட்டுரைகளை திரும்பவும் போடுகிறார், இந்தக் கட்டுரையும் நான் முன்பே இதே பகுதியில் படித்ததுதான். [எப்போது என்று ஞாபகமில்லை]. சில வாரங்களுக்கு முன், ஒரு பெண் தன்னுடைய விருப்பமில்லாமல் யாரோ கர்ப்பழித்துவிட்டதாக இவருக்கு போன்செய்ததாகவும், மருத்துவ ரீதியில் அது சாத்தியமே இல்லை என்று கூறியதாகவும் எழுதியிருந்தார். அது சுமார் பத்து வருடத்துக்கும் முன்பாகவே போட்ட கட்டுரை. ஏதோ ஒரு வாரத்துக்கு முன்புதான் நடந்த மாதிரி எழுதியிருந்தார். இது மாதிரி இன்னும் எவ்வளவு எழுதித் தள்ளுகிறாரோ தெரியவில்லை.

    இந்தக் கட்டுரை இந்தியர்கள் என்று குறிப்பிடுகிறது, தமிழர்கள் என்று தனியாகச் சொல்லவில்லை. சொல்லப் போனால் அமெரிக்க இந்தியர்களில் தமிழர்களை விட ஆந்திரம், கேரளம், வங்காளம் போன்ற மாநிலத்தவர்கள் மிக அதிகம். பிழைக்கப் போன இடத்தில், அந்த இடத்தையே சொந்தமாகிக் கொள்ள நினைத்தால், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்தியர்களை ஓட ஓட விரட்டியடிப்பது போல அங்கும் நடக்கலாம் என்ற எண்ணத்தில் சொல்கிறாரோ என்னவோ.

    Jayadev Das அவர்களுக்கு,

    தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

Popular Posts