லிவிங் டூகெதர்:மென்பொருள் துறையினர் படும்பாடு

 அதென்னமோ தெரியல. மென்பொருள் துறையினர் தான் பலரின் கண்களுக்கு உறுத்தலாக தெரிகின்றனர். நான் இங்கே தமிழ்நாட்டை சேர்ந்த   மென்பொருள் துறையினரை மற்ற மாநில மென்பொருள்துறையினரிடம் தனித்து தான் பார்க்கின்றேன். எந்த மென்பொருள் கார்பொரேட் கம்பெனியாக இருந்தாலும் அங்கே தமிழ்நாட்டை சேர்ந்த மென்பொருள்துறையினர் தனித்து தான் தெரிவார்கள். எப்படி என்றால் ஒரு ப்ரொஜெக்டில் நானூறு பேர் வேலை செய்கிறார்கள் என்று வைத்தால் அதில் பாதி பேர் தமிழர்கள் தான் இருப்பார்கள். மிச்சம் இருப்பவர்கள் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். இந்த மிச்சம் இருப்பவர்கள் அவர்களுக்குள் குழுக்களாக இருக்க வாய்ப்பு
இல்லை. ஆனால் தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இருந்ததாக நினைவில்லை.அப்படி ஒரு ஒற்றுமை. இந்த தனி தனி குழுக்களாக இருக்கும்  தமிழர்களால் சத்தியமாக எந்தவொரு பிரச்சினையும் இல்லைங்க. இவர்களால் லிவிங் டூகெதர் எல்லாம் வாய்ப்பு இல்லைங்க.ஏன் என்றால் நம் தமிழ்நாட்டை சேர்ந்த மென்பொருள்துறையினருக்கு (சென்னையினை சேர்ந்தவர்களை சேர்க்காமல்)எப்பவும் கூச்ச சுபாவம் அதிகம். இவர்களாக யாரிடமும் தானாக சென்று பேசுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அப்படியே யாராவது தங்களிடம் பேசினாலும் அவர்களிடம் தொடர்ந்து பேசுவதற்கும் தெரியாது. இது தான் தமிழ்நாட்டினை சேர்ந்த மென்பொருள்துறையினரின் உண்மை நிலை. இந்த மிச்சம் சொச்சம் எல்லாம் ஆந்திர, கர்நாடக, கேரளா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் தான் நீங்கள் சொல்லும் அந்த லிவிங் டூகெதர் எல்லாம் செய்து புண்ணியம் கட்டி கொள்பவர்கள். நான் இதுவரை விளக்கியது மென்பொருள்துறையை மட்டுமே(IT field).

மென்பொருள்துறையினர் என்று மற்றவர்களால் கருதப்படும் BPO, Call centers பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. ஏன் என்றால் இந்த BPO, call centers வந்த பிறகு தான் நம் தமிழ்நாட்டில் இந்த லிவிங் டூகெதர் வந்துள்ளது. BPOவுக்கும் மென்பொருள்துறைக்கும் வித்தியாசங்கள் பலருக்கு தெரிவதில்லை. (அதென்னப்பா சும்மா உட்காந்து பேசுறதெல்லாம் ஒரு வேலையா அப்படின்னு கேட்கிறவர்கள் ஒரு நாள் அப்படி உட்காந்து முயற்சி செய்து பாருங்கள். அப்போது தெரியும் அது எப்படின்னு.)


இந்த வித்தியாசங்கள் அவர்களின் வாழ்க்கை முறையிலும் உள்ளது. மென்பொருள்துறையினர் எப்பவும் மற்றவர்கள் வேலைக்கு செல்வது போல் சென்று மற்றவர்கள் திரும்பும் நேரத்தில் வருகிறார்கள்(வேலை இருந்தால் இந்த நேரம் அதிகம் ஆகும்). இதுவே BPO மற்றும் கால் சென்டர் என்றால் பெரும்பாலும் இரவு நேரத்தில் வேலை பார்ப்பார்கள் அல்லது நேரங்கெட்ட நேரத்தில் வேலை பார்ப்பார்கள்.  இப்படி பலவிஷயங்கள்  இருக்கும்போது எப்படி தான் இவர்களாக எதோ தமிழ்நாட்டை சேர்ந்த மென் பொருள் துறையினரால் தான் கலாச்சாரம் எல்லாம் கெடுகிறது என்று சொல்கிறார்களோ?

இதில் கொடுமை என்னவென்றால் எங்கே என்ன சொல்வது என்றே பலருக்கு தோணுவது இல்லை. இரண்டாயிரத்து எட்டாம் வருடம் மென்பொருள் துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தினை வாழ்த்தி பேச வந்தவர்களுள் ஒருவர் சொன்னார். "மென்பொருள் துறையினர் என்றால் பீச் பார்க் என்று மட்டுமே சுத்துபவர்கள் என்றே நினைத்திருந்தேன். நீங்கள் தான் மாற்றி விட்டீர்கள் " என்று.

 
(மறு நாள் காலையில் உண்ணாவிரதத்தில் இருந்ததால் தண்ணீர் குடிக்க சென்றேன். தொடர்ந்து தண்ணீர் குடிக்கவில்லை என்றால் கிட்னி பாதிக்கப்படும் மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்த மென்பொருள் துறையினர் ஏராளம். ஒரு நாள் மட்டும் இல்லை இரு நாட்களும் அவ்வாறு தான் இருந்தார்கள். சும்மா உண்ணாவிரதம் இருப்பது போல் இருந்து நடிக்க அவர்களுக்கு தெரியவில்லை. பலருக்கு உண்ணாவிரதம் இருந்த திலீபன் தான் முன்னுதாரணம். அவரும் தண்ணீர் குடிக்கவில்லை. மறுநாள் காலையில் அங்கே சென்ற ஒரு வழிபோக்கர் சொன்னது தான் கொடுமையிலும் கொடுமை. அந்த கழுத்து முழுவதிலும் தங்கத்தினால் செய்யப்பட்ட ஆபரணங்கள் அணிந்த பிச்சைகாரர் சொன்னார். "ரொம்ப ஆடினீர்கள் தானே. உண்ணாவிரதம் இரண்டு நாள் இருந்தால் ஒன்றும் குறைந்து போவதில்லை. " எப்படி இருக்கிறது. அவரின் தனிப்பட்ட கோபத்தை காட்டிய நேரத்தை பாருங்கள். எவ்வளவு கேவலமாக இருக்கிறார்கள். இதில் இருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் தங்களுக்கு மென்பொருள் துறையில் வேலை கிடைக்காத கோபத்தில் தான் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று.)


சென்னையில் ஐந்து நட்சத்திர டீலக்ஸ் அந்தஸ்து கொண்ட ஹோடேல்களின் எண்ணிக்கை ஐந்து.
சென்னையில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோடேல்களின் எண்ணிக்கை ஆறு.
சென்னையில் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோடேல்களின் எண்ணிக்கை பதினொன்று.
சென்னையில் மூன்று நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோடேல்களின் எண்ணிக்கை பத்து + ஒன்பது.

ஒரு சின்ன சர்வே. யாரால் லிவிங் டூகெதர் வளர்கிறது என்று.

நள்ளிரவுக்கு மேல் இந்த ஹோடேல்களில் தண்ணி அடித்துவிட்டு ஒன்றாக கூத்து அடிப்பவர்களில் பலர். அரசியல்வாதிகளின் பிள்ளைகளில் பலர் அங்கே தான் இருக்கிறார்கள்.பெருத்த பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் இருக்கிறார்கள்,மென்பொருள் துறையினரும் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களை விட அங்கே அதிக நேரம் அல்லது அதிக நாட்கள் அங்கே குடித்தனம் நடத்துபவர்கள் சினிமா துறையினர் மட்டுமே. மற்றவர்களுக்கு அங்கே இருப்பது பொழுதுபோக்கு மட்டுமே. சினிமாதுறையில் இருக்கும் அந்த நண்பர்கள் அதற்கு அடிமையாக மாறி ரொம்ப நாட்கள் ஆகின்றன. கல்யாணம் செய்யாமல் குடித்தனம் நடத்தும் துணை நடிகர்கள் எண்ணிக்கையும் ஏராளம். இப்படி இருக்கும்போது விவரம் தெரியாமல் பேசினால் மட்டும் லிவிங் டூகெதர் ஒழிக்கப்படுமா என்ன?


அதென்னமோ லிவிங் டூகெதர் என்பது மென்பொருள்துறையினர் மட்டுமே கொண்டு வந்த கலாச்சாரம் போல பல பதிவுகள் வந்து கொண்டு இருக்கின்றன. வெளியே இருந்து சொல்பவர்கள் இருக்கட்டும். உள்ளே இருந்து ஒரு குரலாவது எதிர்த்து வர வேண்டுமே என்பதற்காகவே இந்த பதிவு. மற்றபடி நான் இந்த லிவிங் டூகெதர் கலாச்சாரத்தை கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன்.

11 Response to "லிவிங் டூகெதர்:மென்பொருள் துறையினர் படும்பாடு"

  1. உங்கள் எழுத்து நன்றாக இருக்கிறது மென்பொருள்துறையினர் மட்டும் சொல்வது தவறுதான்

    நான் இந்த லிவிங் டூகெதர் கலாச்சாரத்தை கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன்////

    இதை நான் வரவேற்கிறேன்....

    சௌந்தர் அவர்களுக்கு என் நன்றிகள்

    உங்களுக்கு விருது கொடுத்து இருக்கேன் வந்து பெற்று கொள்ளுங்கள்

    http://rasikan-soundarapandian.blogspot.com/2010/11/blog-post_493.html

    sivakumar says:

    தமிழ்நாட்டில் இருக்கும் மென்பொருள் நிறுவங்களில் இருக்கும் தமிழர்கள் இணைந்து வாழ்கிறார்கள் என்று சொன்னார்களா என்பது தெரியாது. ஆனால் சென்னையில் இந்தக் கலாச்சாரம் இருக்கிறது. பெரும்பாலும் வட இந்தியரிடையே இருக்கலாம். அதிக சம்பளம் பெறுகிறவர்கள் என்ற அடிப்படையில் மென்பொருள் துறையினர் இதற்கு இலக்காகின்றன்ர். இது மென்பொருள் துறையினர் கொண்டுவந்தார்கள் என்பதல்ல என் கருத்து. இது போன்ற மிகப்பெரும் நிறுவனங்களில் வேலைபார்க்கும் சிலர் மேலைக்கலாச்சாரத்திற்கு பலியாவது தவிர்க்கமுடியாது. உலகம் முழுவதுமே ஒரே கலாச்சாரத்தைத் திணிக்கும் போக்கில்தான் இதுவும் நடக்கிறது.

    உள்ளே இருந்து ஒரு குரலாவது எதிர்த்து வர வேண்டுமே என்பதற்காகவே இந்த பதிவு. மற்றபடி நான் இந்த லிவிங் டூகெதர் கலாச்சாரத்தை கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன்.//

    :)

    புரிகிறது.

    Prem S says:

    Arumai anparae ungal vilakkam valthukal

    சி.பிரேம் குமார் அவர்களுக்கு,

    தங்களின் வருகைக்கும் பங்களிப்பிற்கும் நன்றி.

    தமிழ் வினை அவர்களுக்கு,


    தங்களின் வருகைக்கும் பங்களிப்பிற்கும் நன்றி.

    எல்லாரும் மென்பொருள்துறையினர் தான் இருப்பதிலே அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது தவறு. மென்பொருள்துறையினர் எப்போதோ கீழே விழுந்துவிட்டனர். இதனை பற்றி தனியே ஒரு போஸ்ட் எழுதலாம்.உங்களின் கருத்து எனது அடுத்த போஸ்டுக்கு தூண்டுகோலாக அமையபோகிறது. நன்றி.

    jmmsanthi அவர்களுக்கு,

    தங்களின் வருகைக்கும் பங்களிப்பிற்கும் நன்றி.

    Unknown says:

    purikirathu sir

    Unknown says:

    தங்கள் கருத்து சரியே... நானும் இதை கண்டிக்கிறேன்...

Popular Posts