ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-4

ஆபரேஷன் ப்ளூ ஸ்டாருக்கு பிறகு சீக்கியர்களின் கோபம் அப்போது ஆட்சியில் இருந்த இந்திராவின் மீது விழுந்தது. பலர் அரசு வேலைகளில் இருந்து ராஜினாமா செய்தனர். ராணுவத்திலும் ஒரு சீக்கிய கிளர்ச்சி ஏற்படும் அபாயம் இருந்தது. இந்த விஷயங்கள் உளவுத்துறை மூலம் ஆட்சியில் இருந்தவர்களிடம் சொல்லப்பட்டது. ஆனால் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை.இதில் வேறு அங்கே இந்திரா காந்தியிடம் இருந்த பாதுகாவலர்கள் பலர் சீக்கியர்களாகவே இருந்தனர். இதை எப்படி அனுமதித்தனர் என்றே பலருக்கு தெரியவில்லை. ஒரு வேளை பிற்காலத்தில் உண்மைகள் வரக்கூடும் என்றே வேண்டுமென்றே விட்டுவிட்டார்களா?
31 அக்டோபர் 1984 காலை மணி 9:08:
வீட்டில் இருந்த அலுவலகத்தில் இருந்த இந்திரா காந்தியை இரு பாதுகாவலர்கள் வணக்கம் கூறினர். அதற்கு நமஸ்தே என்று பதிலுக்கு வணக்கம் கூறினார் இந்திரா காந்தி.சஞ்சய் காந்தி கொல்லப்பட்ட அன்று எப்படி ராஜீவ் காந்தி டெல்லியில் இல்லையோ அதே போல் இம்முறையும் அவர் டெல்லியில் இல்லை. அவர் மேற்கு வங்கத்தில் அரசியல் சுற்று பயணத்தில் இருந்தார். எப்பவும் போல் சோனியா காந்தி வீட்டில் இருந்தார். அப்போது அவர் மேற்பார்வையில் தான் அங்கே பிரதமரின் வீட்டில் எல்லாம் நடைபெற்றது.(இதுவும்)

இந்திரா காந்தி அன்று தனக்காக பேட்டியெடுக்க காத்திருந்த பிரிட்டிஷ் நடிகர் பீட்டர் உஸ்தினோவ்வை பார்க்க அந்த பங்களாவில் இருந்த நடைபாதையில் சென்று கொண்டு இருந்தார். அவரின் பின்னர் ஐந்து பாதுகாவலர்கள் நடந்து வந்தனர். வழியில் எதிர் நோக்கி நின்று கொண்டு இருந்த பாதுகாவலர்கள் வணக்கம் செய்து செலுத்தி கொண்டு இருந்தனர். அங்கே அடுத்தடுத்து காத்திருந்த இரண்டு பாதுகாவலர்கள் தங்கள் உடையில் காக்கியையும் உருவத்தில் சீக்கியர்களாகவும் இருந்தனர். அதில் பியாந்த்சிங் (சப்-இன்ஸ்பெக்டர்), சத்வந்த்சிங் (கான்ஸ்டபிள்) இருந்தனர்.
 

இதில் பியாந்த்சிங் பத்து வருடங்களுக்கும் மேலாக அங்கே வேலை பார்த்து வந்தார். இந்திரா காந்தியிடம் நம்பிக்கை பாத்திரமாக இருந்தார். புதிதாக சேர்ந்த சத்வந்த் சிங்கிற்கு இருவத்தொரு வயது மட்டுமே. ஆனால் சிறப்பு பயிற்சிகளின் மூலம் பிரதமரின் பாதுகாவலராக அங்கே நியமிக்கபட்டிருந்தார். இது நடந்து ஐந்து மாதங்களே ஆகியிருந்தன.


இப்போது நடப்பு உலகத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்திரா காந்தியிடம் வருவோம். அங்கே அவர்கள் இருவரும் வணக்கம் செலுத்துவது போல் நின்றனர். பியாந்த்சிங் தன்னிடம் இருந்த .38 பிஸ்டல் மூலம் இந்திரா காந்தியின் வயிற்றில் சுட்டார். (ஐந்து ரவுண்டுகள்). பின்னாடி இருந்த சத்வந்த் சிங்கிற்கு முப்பது ரவுண்டுகள் சுடும் வாய்ப்பு கிடைத்தது. பின்னால் இருந்த பாதுகாவலர்கள் தங்கள் பிரதமர் தங்கள் கண்முன் சுடப்பட்டது தெரிவதற்கு சில வினாடிகளே ஆகின.



அவர்களும் அந்த இருவரை நோக்கி துப்பாக்கிகளினால் சுட்டு வீழ்த்தினர். அங்கேயே பியாந்த் சிங் இந்திராவோடு விழுந்து  மரணித்தார். சத்வந்த் சிங் படுகாயமுற்றார்.ஆர்.கே தவான் அலறி அடித்து கொண்டு அங்கே வந்தார். அங்கே விழுது கிடந்த இந்திரா காந்தியை தூக்கி கொண்டு சோனியாவையும் கூட்டி கொண்டு சென்றனர். சோனியாவின் மடியில் இந்திரா காந்தி படுத்திருந்தார்.


இங்கேயும் ஒரு சந்தேகம் எப்பவும் அவசர சிகிச்சைகள் என்றால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தான் எல்லாருமே செல்வார்கள். ஆனால் இங்கே அவ்வாறு நடக்கவில்லை. அருகிலே இருந்த ராம் மோகன் லோஹியா மருத்துவமனைக்கு ஒருவேளை கொண்டு சென்றால் இந்திரா பிழைத்து இருப்பாரோ என்னமோ தெரியவில்லை ஆனால் அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். அப்படி கூட்டி செல்ல கூறியது சோனியா காந்தி தான் என்று ஆர்.கே தவான் கூறியுள்ளார்.

அங்கே அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவருக்குள்ளே பாய்ந்த தோட்டாக்களில் ஏழினை எடுத்தனர்.எட்டாவதை எடுக்கும்முன் அவர் இறந்தார். பகல் 2.25க்கு அவர் மரணித்தார். ஆனாலும் மாலை ஆறு மணியளவிலே இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்திரா காந்தி இந்த சீக்கியர்களினால் கொல்லப்பட்டு இருந்தாலும் இதில் சில கேள்விகள் உள்ளன.


  1.  சீக்கியர்களினால் இந்திராவுக்கு ஆபத்து உள்ளது என்று தெரிந்தும் அவர்களை பாதுகாவலர்களாக இருக்க அனுமதித்தது யார்?
  2. வீட்டுக்குள் நடக்கும்போது கூட குண்டு துளைக்காத உடை அணிந்து செல்வது தான் இந்திராவுக்கு வழக்கம். அன்று அவர் அவசரத்தில் அதை அணியவில்லை. ஆனால் அதை அவர் அணியவில்லை என்பதை யார் பியாந்த் சிங்கிடம் சொன்னது?
  3. அவசரமாக தான் அவர் நடந்து சென்றார் என்றால் அங்கே நின்று இருந்த பியாந்த் சிங்கிடம் எவ்வளவு நேரம் நின்று இருந்திருக்க முடியும்? அப்படி நின்று இருக்கும்போது பியாந்த் சிங் தன்னுடைய பிஸ்டல் எடுக்க எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்? சப் இன்ஸ்பெக்டர் நிலையில் இருக்கும் ஒருத்தர் தன்னுடைய துப்பாக்கியை என்ன தொங்கவா போட்டு இருந்தார் உடனே எடுத்து சுடுவதற்கு? உறையில் தானே இருந்திருக்கும். அப்படி எடுக்கும்போது பின்னால் இருப்பவர்களுக்கு தெரியாதா?
  4. ஒரு பிஸ்டலில் இருக்க கூடிய குண்டுகள் எத்தனை ? ஒரு ஸ்டன் கன்னில் இருக்க கூடியது எத்தனை? அதெப்படி சரியாக பியாந்த் சிங்கை மட்டும் கொன்றார்கள். பியாந்த் சிங்கை கொன்றால் யாருக்கு லாபம்? சுட்டுவிட்டார்கள் என்று தெரிகிறது. இருவரில் ஒருவரை மட்டும் சரியாக சுட்டு கொல்லவேண்டும் என்று அங்கே கட்டளையிட்டது யார்?
  5. அடுத்தது சுட்டவுடன் சோனியா காந்தி அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மருத்துவமனைக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியது ஏன்?
விடை தெரிந்தவர்கள் சொல்லவும்.




அடுத்த பதிவில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் பற்றியது.

5 Response to "ராஜீவ் காந்தி என்னும் மனித மிருகம்-4"

  1. Unknown says:

    நம் தமிழ் இனத்தை அழித்த இந்த படுபாதகனின் குடும்பம்... இன்று மத்திய ஆட்சியில் பெரும் ஊழலில் கொழித்துக்கொண்டிருக்கிறது.. யோக்கியபுள்ளைப்போல் வேடமிடும் ராகுல் மன்மோகனுக்கு நல்லபிரதமர் பட்டம் வேறு கொடுக்கிறார்.(காமன் வெல்த் விளையாட்டு, ஸ்பெக்ட்ரம் ஊழல்)நாறுகிறது இவர்களது யோக்கிய பராக்கிரமம்.

    மிருகங்களுக்கு கூட தன் இனத்தினை காப்பாற்ற முயற்சி செய்யும். அந்த சிறு உணர்வு கூட இல்லாமல் தலைவர்கள் இருக்கும்வரை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.இன்னமும் நேரு குடும்பத்தை தாங்குபவர்களும் பல்லக்கு தூக்கிகளும் இருக்கிறார்கள்.

    நல்ல தொடர். முழு மூச்சோட படிச்சு முடிச்சேன்!!

    வாழ்த்துக்கள்

    http://kuttisuvarkkam.blogspot.com/

    //அதற்கு நமஸ்தே என்று பதிலுக்கு தமிழில் வணக்கம் கூறினார் இந்திரா காந்தி.// யப்பா... தாங்க முடியல.... நமஸ்தே தமிழ்னு எந்த லூசுப்பய சொன்னான் உங்களுக்கு?

    PRINCENRSAMA says:
    January 19, 2011 8:07 PM
    //அதற்கு நமஸ்தே என்று பதிலுக்கு தமிழில் வணக்கம் கூறினார் இந்திரா காந்தி.// யப்பா... தாங்க முடியல.... நமஸ்தே தமிழ்னு எந்த லூசுப்பய சொன்னான் உங்களுக்கு?

    தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி. அது இந்தி என்று வந்திருக்க வேண்டும்

Popular Posts